SuperTopAds

இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு..! புகைரத சேவைகள் ஆரம்பம், சந்தைகள் மீள திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கான புகைரத சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூடப்பட்டிருந்த சந்தைகளும் இன்று திறக்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு,

யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, 

யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரத சேவை ஆரம்பமாகி இருக்கின்றது.அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் 

யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவையைஆரம்பிக்க இருக்கின்றது.

ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையாரதமும், 

இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையாரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். 

அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினைமேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

பயனிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயனத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் யாழ்.மாவட்டத்தில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது. கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக 

மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க 

இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன யாழ்.மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை 

மருதனாரமடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன 

சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் போலீசார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

.