இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! அடுத்த 2 வாரங்களில் தடுப்பூசி கிடைக்கும், பணிகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைக்கப்பெரும். என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தொிவித்துள்ளார். 

இதன்படி அஸ்ட்ராஜெனெகா மற்றும் பைசர் பயோஎன்டெக் ஆகிய தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 

அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு உட்பட வெளிநாட்டு அரசாங்கத்தின் பலருடன் 

பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற 

ஒஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொரேனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Radio