வடக்கில் 4 மாவட்டங்களில் மட்டுமே சந்தைகள், திருமண மண்டபங்களை திறக்க அனுமதி..! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு, பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த சந்தைகளை நாளை மறுதினம் திங்கள் கிழமை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளபோதும், இந்த கட்டுப்பாடு தளர்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் நீடித்துவரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் சந்தைகள் திருமண மண்டபங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் சந்தைகள், திருமண மண்டபங்கள் திறக்கப்படும்போதும் சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்படும். 

சுகாதார நடைமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுபக்படும். என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

Radio