SuperTopAds

அபாய வலயங்களால் இருந்து வந்தாலும் தனிமைப்படுத்தல் இல்லை..! தனிமைப்படுத்தல் செயற்பாடு நிறுத்தம்..

ஆசிரியர் - Editor I
அபாய வலயங்களால் இருந்து வந்தாலும் தனிமைப்படுத்தல் இல்லை..! தனிமைப்படுத்தல் செயற்பாடு நிறுத்தம்..

மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின்  பணிப்பை தொடர்ந்து அபாய வலயங்களில் வடமாகாணத்திற்குள் வருவோரை தனிமைப்படுத்தும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வகத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டதாக கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் என கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.