சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறாமல் நபர்களையோ, நிறுவனங்களையோ தனிமைப்படுத்த முடியாது..! எழுத்துமூலம் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன் அனுமதியை பெறாமல் எந்தவொரு நபரையும் தனிமைப்படுத்தகூடாது. என பணிப்பாளர் நாயகத்தினால் 9 மாகாணங்களினதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் எழுத்துமூல உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

அவரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைவருடைய பொறுப்பும் கட்டாயமாக தேவைப்படுவது உடன் அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடைமுறைகளை 

அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசின் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படுவதுடன் மாவட்டங்களைக் இடையில் பிரயாணம் செய்வோரை தனிமைப் படுத்துதல் நிறுவனங்களை மூடுதல் மற்றும் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் 

போன்ற நடவடிக்கைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறாமல் நடைமுறைப்படுத்துவதை தவிர்க்கவும். தனிமைப்படுத்துதல் நிறுவனங்களை மூடுதல் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கையினை 

மதிப்பீடு செய்து உண்மைத் தேவைகள் இருக்குமாயின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கைக்கு பொருத்தமான தரவுகளை மற்றும் தர்க்க ரீதியாக அறிவிக்க வேண்டும். மேலும் 50 மேற்பட்ட பணியாளர்களை 

கொண்ட நிறுவனங்களை மூடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறாமல் மூட முடியாது என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு