நிலத்தடி நீர் சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் திறக்கப்படபோகும் “நொதேண் பவர்” மின் உற்பத்தி நிலையம்..! பின்னணி என்ன? மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பார்களா?

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைய ஏதுவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் மூடப்பட்டுள்ள நொதேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் குழுமமான எம்.டி.டி. வாக்கர்ஸ் பி.எல்.சி. பணிப்பாளர் டாக்டர் அரோஷ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இயங்கிய நொதேன் பவர் நிறுவனத்தின் 36 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஆலை யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஏதுவாக இயங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2015 ஜனவரியில் மூடப்பட்டது.

4.5 பில்லின் ரூபா முதலிட்டுடன் இயங்கி இந்த மின் உற்பத்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவை மல்லகம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த முன்முறையீட்டு விசாரணையில் யாழ்ப்பாணத்தில் நீர் மாசுபாட்டுக்கு நேதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையம் எந்தவகையிலும் பொறுப்பல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்கலாம் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 

உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக எம்.டி.டி. வாக்கர்ஸ் பி.எல்.சி. பணிப்பாளர் டாக்டர் பெர்னாண்டோ அந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாங்கள் விரைவில் நோதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை மீள ஆரம்பிக்கவுள்ளோம். 

எம்டிடி வாக்கர்ஸ் பி.எல்.சி. நிறுவனம் எப்போதும் அதன் அனைத்து பங்குதாரர்களின் நலன்களை உறுதி செய்வதில் ஈடுபாட்டுடன் உள்ளது. அதே நேரத்தில் பெருநிறுவனங்களுக்கான உரிய நெறிமுறைகள் மற்றும் உயர் தரத்தை நாங்கள் பேணுகிறோம் என சமீபத்தில் 

நேதேர்ன் பவர் நிறுவனத்தக்கு விஜயம் செய்து கள ஆய்வை மேற்கொண்டது . நோதேர்ன் பவர் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் எரிபொருள் மூலம் இயக்கப்படும் 36 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையத்தை இயக்குவதற்கு இலங்கை மின்சார சபையின் கேள்வி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான மின் சக்தியை வழங்குவதற்கு அங்குள்ள ஆபத்துக்களை கருத்தில் கொண்டு எவரும் முன்வராத நிலையில் அயுதப் போராட்டம் உச்சத்தில் இருந்த 2007 ஆம் ஆண்டிலேயே நாங்கள் நேதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகளைத் தொடங்கினோம். 

2009 முதல் இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான கஷ்டங்களை அனுபவித்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள எங்களின் துணிவான செயற்பாடே காரணம் எனவும் எம்.டி.டி. வாக்கர்ஸ் பி.எல்.சி. பணிப்பாளர் டாக்டர் அரோஷ பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நிறுவனம் 2 கோடி ரூபாய்களை பகிர்ந்தளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கிய நிலையில் குறித்த நிறுவனத்தின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் கழிவு ஒயில் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் இதுவரை கிடைக்கப் பெறாத நிலையில் மீண்டும் குறித்த நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்போம் என கூறுவது ஆரோக்கியமான கருத்து அல்ல. அதுமட்டுமல்லாது குறித்த நிறுவனம் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை 

மீண்டும் ஏற்படுத்தாமல் இருப்பதற்குரிய உத்தரவாதத்தையும் பாதுகாப்பு பொறிமுறையும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆராய்ந்தா ? வடக்கிற்கு வர முயல்கிறது என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து 

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடையங்களை நிராகரிக்க வேண்டும்.

Radio