யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விகாரை மீது இனந்தொியாதவர்கள் தாக்குதல்..! பொலிஸார் விசாரணையில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரை மீது இனந்தொியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையில் காணப்படும் புத்தர் சிலை மீதே இனம் தெரியாதோரால் 

தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.காட்டு பகுதியின் ஊடாக நுழைந்தவர்கள் பாதுகாப்பு வேலியை கடந்து நுழைந்துள்ளதுடன் சிலையை சேதமாக்க முயற்சித்துள்ளனர். 

எனினும் குறித்த சிலையானது எவ்வித சேதங்களிற்கும் உள்ளாகவில்லை எனவும், அதன் மேல் பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இனங்களிற்கு இடையில் மோதலை உண்டுபண்ணும் வகையில் விசமிகள் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், 

குறித்த சம்பவத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இனங்களிற்கு இடையில் மோதலை தூண்டும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்

 மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு