யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய திரையரங்கு முடக்கப்பட்டது..! சுகாதார பிரிவு அதிரடி..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் திரையரங்கு ஒன்றை சுகாதார பிரிவினர் முடக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.

ரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை ஆகிய காரணங்களால் மூடப்பட்டது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.

அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு