புதியவகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் அபாயம்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

பிரிட்டன் மற்றும் ஜரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபுபட்ட புதியவகை கொரோனா தொற்று இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர் ஹரித்த அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரிட்டனில் இரு புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் பேசப்படுகறது. அங்கு தற்போது இனங்காணப்பட்டவர்களில் 100ற்கு 60 வீதமானவர்கள் புதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் எமது நாடும் பாரிய அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளதுடன் புதிய வைரஸ் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்குள்ளும் பரவியிருக்கும் நிலையில் எமது நாட்டுக்குள்ளும் அது சுலபமாக பரவும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு