மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் சிக்கலுக்கு காரணம் என்ன? கூறுகிறார் சீ.வி
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முதலமைச்சர் மற்றும் ஒரு சிரேஸ்ட அமைச்சர் ஆகியோர் மட்டுமே இணை தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது பல அரசியல்வாதிகள் இi ண தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையால் பல சிக்கல்கள் வருகின்றன.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 118வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மா வட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பாக பேசும்போதே முதலமைச்சர் மேற்
கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலப்பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இணை தலைவர்களாக இருப்பார்கள்.
அந்த நடைமுறை தொடர்ந்துவந்த நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இணை தலை வர்களாக வேறு சில அரசியல்வாதிகளும் இணைக்கப்பட்டார்கள். நான் ஜனாதிபதியை சந்தித்தபோது
சில அரசியல் நலன்களுக்காக இவ்வாறு செய்துள்ளீர்கள். ஆனால் பல்வேறு சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
மேலும் இவ்வாறு பல அரசியல்வாதிகள் இணை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் பேச வேண்டிய விடயங்களை கூட அவர்கள் இணை தலைவர் ஆசனத்திலிருந்து பேசி கொண்டிருக்கின்றார்கள். இதனை கூறியதால் எனக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இப்போது மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான திகதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 34 பிரதேச செயல கங்கள் மற்றும் 5 மாவட்ட செயலகங்கள் என 39 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு நான் செல்ல வண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. இவ்வாறான நிலை மாற்றப்படாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நினைவேறாமல் போகும் என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாவட்ட ஒருங்கிi ணப்பு குழு கூட்டங்களால் உருவாகும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை குற்றம் சொல்லி பயனில்லை. ஜனாதிபதியே பொறுப்பாளியாகவேண்டும் என்றார்.