இணையதளம் ஊடாக விபச்சார அழகிகள் வியாபாரம்..! வீடொன்று முற்றுகை, 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது..
இணையதளம் ஊடாக நடைபெற்றுவந்த அழகிகள் வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொழும்பு - கல்கிசை பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 9 பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்ஸ பகுதியில் இருமாடி சொகுசு வீடொன்றில் குறித்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெறுவதாக குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கல்கிஸ்ஸ பொலிசார் பல நாட்களாக குறித்த வீடு மற்றும் அங்கு உள்ளவர்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு இன்று சோதணைக்குட்படுத்தப்பட்டது. இதன் போதே 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.