வவுனியாவில் சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்படவில்லை: - முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
வவுனியாவில் சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்படவில்லை: - முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் பழைய வங்கிகளை ஒத்த நடைமுறைமையே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே அங்கு பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதுடன் முறைகேடுகளையும் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தெரிவிக்கையில்,இவ்வாறு இடம்பெற்றுவரும் நிலையிலும் அவர்களுக்கான தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

நிதி மோசடி மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களுக்குள்ளே அவர்களுக்கு தண்டனை மாற்றங்கள் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் நிதிமோசடிகளை பாரியளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதுடன் நிதி மோசடிகள், முறைகேடுகள் இடம்பெறாமலிருக்க சமுர்த்தி வங்கிகளை கணனிமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒரே வலையமைப்பில் அனைத்து வங்கிச் செயற்பாடுகளும் தற்போது தொழில்நுட்பத்தில் மேலோங்கி செயற்பட்டு வரும் வேளைகளில் அரசாங்கத்தின் திணைக்களமான சமுர்த்தித் திணைக்களத்தின் வங்கி ஒன்று மட்டும் பழைய முறைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதுவே முறைகேடுகள், நிதிமோசடிகள் இடம்பெறுவதற்கு வழிசமைத்து கொடுக்கின்றன. மேலும் பணம் அறவிடுவதற்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டுக்களை உத்தியோகத்தர்கள் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகின்றனர்.

வவுனியா நகர்ப்பகுதியிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் பல நிதி மோசடிகளை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றன.

எனவே நிகழ்கால முறைமையில் சமுர்த்தி வங்கிகள் கணனிமயப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே உத்தியோகத்தர்களினால் இடம்பெறும் முறைகேடுகள் நிதிமோசடிகளை தடுத்து நிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு