அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!! -முதலாவதாக போட்டுக் கொண்ட தாதியர்-
உலக அளவில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று திங்கட்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள வைத்தியசாலையில் தாதியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது.
அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.