கோவில் மணி கயிறு கழுத்தில் இறுகி 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..!

ஆசிரியர் - Editor I

கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கோவில் மணி கயிற்சில் கழுத்து இறுகி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் டிக்கோயா டங்கல் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் அந்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த 

ஆலய மணி கயிற்றில் கழுத்து பகுதி இறுகியதால் மரணித்துள்ளதாக தெரியவருகின்றது. சிறுவனின் சடலம் மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 

பிரேத பரிசோதனையை மஸ்கெலியா, மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நரசிம்ம பெருமாள் ஆகியோர் 

மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த சிறுவனின் தந்தை, தாய் பணிக்கு சென்ற வேளையில் 

இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து நோர்வுட் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio