SuperTopAds

கொரோனா கொத்தணியின் மூலம் தொடர்பான விசாரணை நடத்திய 90 பொலிஸாருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
கொரோனா கொத்தணியின் மூலம் தொடர்பான விசாரணை நடத்திய 90 பொலிஸாருக்கு கொரோனா தொற்று..!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியின் மூலத்தை ஆராய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டிருந்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்படி தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 27/ 2ன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே 

அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது, மினுவாங்கொடை கொரோன வைரஸ் கொத்தணியின் மூலம் தொடர்பாக விசாரித்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவை சேர்ந்த 60 பேருக்கு 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குற்றத் தடுப்பு பிரிவிடம் இருந்து நவம்பர் 5ஆம் திகதியே விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. 

அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை. 

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கைகள் இடம்பெற்று விரைவில் விசாரணை நிறைவு செய்யப்படும் என்றார்.