SuperTopAds

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 30 பேருந்துகளின் அனுமதியை பறிமுதல் செய்ய அரசு அதிரடி உத்தரவு..!

ஆசிரியர் - Editor I

கொவிட் -19 சுகாதார பாதுகாப்பு சட்டங்களை மதிக்காமல் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபடும் 30 பேருந்துகளின் பயண அனுமதியை இரத்து செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவ்வாறு பஸ் வண்டிகளின் போக்குவரத்து அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.கொவிட்-19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் சாரதிகள் 

மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.