யாழ்.தீவக வலய பாடசாலைகள் நாளை இயங்குமா..? மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.தீவகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் தீவகத்தில் நாளைய தினம் பாடசாலைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கரைநகர் மற்றும் வேலணை பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இனக்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் சமூக மட்டத்தில் நட மாடியதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவருடன் நேரடியாக தொடர்புபட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குப்பட்டுள்ளன.

இந் நிலையில் காரைநகர் மற்றும் வேலணை பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தல் முடியும்வரை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் .

நாளைய தினம் தீவக வலயபாடசாலைகள் வழமை போல் இயங்கும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட கூட்டம் நாளைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. அக் கூட்டத்தின் போதே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முடிவு எட்டப்படும், என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு