SuperTopAds

இரு மாணவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று..! இரு பாடசாலைகள் முடக்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 40 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட இரு பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 40 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

குறித்த சம்பவம் அப்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களுக்கு இன்றைய தினம் (புதன்கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் அம்பலாங்கொடை - நிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்தே குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.