17 வயதான மாணவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய மருத்துவர் கைது..! இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்..
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சித்த 17 வயதான சிறுவன் மீது காற்று துப்பாக்கியால் சுட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டதுடன், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மாணவன் மகரஹம அபேக்ஷா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரே சுட்டுள்ளார். இதையடுத்து வைத்தியரை மகரஹம பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த மாணவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட வைத்தியர் இன்று நுகேகொட மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.