கொரோனா நோயாளிகளும், மரணங்களும் அதிகரிக்கும் நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கவேண்டுமா..? ஆசிரியர் சங்கம் கேள்வி..

ஆசிரியர் - Editor I

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் ஊடாக பாடசாலை கொத்தணி ஒன்றை உருவாக்கி விடாதீர்கள் என கூறியிருக்கும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்,

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வதுடன், கொரோனா மரணங்களும் உயர்ந்துவரும் நிலையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாளை (23.11.2020) தரம்:6 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே செல்லுகின்றது. ஆடைத் தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொட கொத்தணியும் நாடு முழுவதும் பரவியுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பிக்கும்போதே ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை நடாத்துங்கள்  என கேட்டோம். பரீட்சை தொடர்ந்தது. தொற்றோடு மாணவர்களும் பரீட்சை எழுதினர்.

அதனை இயல்பு நிலையென கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர். அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம்.

நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம்.

என கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு சில அறிவுறுத்தல்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

01. ஆரம்ப பிரிவுகள்(1-5) இணைந்துள்ள இடைநிலை, மேல்நிலைப் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா? 

02. வெவ்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும், வேறு மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகள் இயங்கும் பிரதேசங்களுக்கு  எவ்வாறு செல்வது அவர்களின் கடமை ஒழுங்கு என்ன? 

போன்ற விடயங்களில் தெளிவான அறிவித்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு