சிவாஜிலிங்கத்தை கடித்த பாம்பு பலி..! ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்..

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கத்தை கடித்த பாம்பு பலி..! ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்..

பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. 

கட்சி அலுவலகத்தில் இருந்த சமயம் கையில் பாம்பு கடித்த நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அவர் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அவர் உடல்நலம் தேறியுள்ளதாகவும் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

இதேவேளை கடித்த பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Radio