சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்லும்போது சுட்டு கொல்லப்பட்ட கைதிக்கும், தப்பி ஓடி கைது செய்யப்பட்ட கைதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது..!

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்லும்போது சுட்டு கொல்லப்பட்ட கைதிக்கும், தப்பி ஓடி கைது செய்யப்பட்ட கைதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது..!

கண்டி போஹம்பர சிறைச்சாலையில் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது தப்பிச் செல்ல முயற்சித்தமைக்காக சுட்டுக் கொல்லப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா சந்தேகத்தின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை கைதிகள் குழு ஒன்று தப்பிக்க முயற்சித்துள்ளது. இதன்போது பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

எனினும் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் கண்டி நகரில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

Radio