கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பி ஓட்டம்..! பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி, 3 பேர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I

கண்டி போஹம்பரை சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த கைதிகள் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. 

கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பி ஓடியுள்ளனர். கைதிகள் தப்பி ஓடுவதை அறிந்த பாதுகாப்பு தரப்பினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 

மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் ஒரு கைதி தப்பி சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

Radio