13 வருடங்களுக்கு பின் சாதனை..! தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்ற மாணவர்கள்..

ஆசிரியர் - Editor I

13 வருடங்களுக்கு பின் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்று சில மாணவர்கள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

காலி மாவட்டம் சங்கமித்தை கல்லூரி மாணவி சியாதி சண்துண்தி கருணாதிலகா மற்றும் மொகமெட் பர்சான், மொகமெட் அம்ர் சிகத் சந்துனு ஆகிய மூவரின் பெயர்கள் நள்ளிரவில் கிடைத்துள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய சாதனையை அந்த மாணவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு இணையத்தில் வெளியிடப்பட்டது.

எனினும் இம்முறை பரீட்சைத் திணைக்களத்தால் தேசிய மற்றும் மாவட்டத் தரவரிசையை வெளியிடப்படவில்லை.

2007ஆம் ஆண்டு தக்ஷிலா கல்லூரியின் மாணவர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு