முஸ்லிம்கள் மீதான வன்முறை அ.இ.இந்து மாமன்றம் கண்டனம்

ஆசிரியர் - Editor I
முஸ்லிம்கள் மீதான வன்முறை அ.இ.இந்து மாமன்றம் கண்டனம்

இலங்கை அரசுசிறுபான்மை இன மக்களின் மத உரிமைகளை பாதகாக்கவேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டதாக அகில இலங்கை இந்துமா மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்செயல்களை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்துமாமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

இனவாதத்தையும் சிறுபான்மை மக்களுக்கெதிராகத் தூண்டப்படும் இன,மதத்துவேச வன்முறைகளையும்முக்கியமாக சமீபத்தில் கண்டி அற்றும் ஏனைய பிரதேசங்களில் இஸ்லாமிய மக்களுக்கெதிராக மேற் கொள்ளப்பட்ட மத வன்முறைகளையும் இந்நாட்டின் இந்து மன்ற அமைப்புகளினதும் ஆலய நம்பிக்கைப் பொறுப்புகளினதும் கூட்டமைப்பான அகில இலங்கை இந்து மாமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இன, மததுவேச பாரபட்சத்தில் எவரையும் ஈடுபடவிடக்கூடாது. மதக்கலாசார வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டியவை தான், ஆனால் பாரபட்சதுவேசம் காட்டுவதை அப்படியான வேறுபாடுகள் நியாயப்படுத்தமாட்டாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தனது நாட்டின் அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆபத்தோ,பயமோ இல்லை என்று ஒவ்வொரு பிரஜையும் உணரவேண்டும். தனது நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாப்பது அந்நாட்டு அரசின் தலையாய கடமையாகும். 

நியாயமானதும் சரியானதுமான முறையில் தாங்கள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேசரீதியில் சகலபி ரஜைகளும் ஒவ்வோர் அரசாங்கத்திடமும் இருந்து (கிடைக்காவிட்டாலும்) ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இன, மத, மொழி வேறுபாடு காட்டும் தீய எண்ணத்துடன் எவரையும் பாரபட்சமாக நடத்துவதற்கு எவரும் அரச அதிகாரத்தைப் பாவிக்க அனுமதிக்கப்படக்கூடாது எனவும் இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு