SuperTopAds

தமிழ் செயலாளர்களால் தடை

ஆசிரியர் - Editor I
தமிழ் செயலாளர்களால் தடை

வடகிழக்கு மாகாணங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் தமிழ் மக்களுக்கு தேi வயாக உள்ள நிலையில், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்காக வந்திருக் கும் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளை மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் நல்லிணக்க அமை ச்சு ஆகிய இரு அமைச்சுக்களில் உள்ள இரு செயலாளர்கள் தடுத்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், மீள்குடியேற்ற அமைச்சின் ஊ டாக வடகிழக்கு மாகாணங்களில் 60 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பு

டன் வடகிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீ ள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்படவுள்ள வீடுகளுக்கான மாதிரியை பதுளை மாவட்டத்திற் கு சென்று நாங்கள் பார்வையிட்டிருக்கின்றறோம். அந்த வீடுகள் கொங்கிறீற் கொண்டு கட்டப் பட்ட எமது மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வீடுகள். அதேபோல் தேசிய நல்லிணக்க அ

மைச்சினால் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளது. அந்த வீடுகளும் கொங்கிறீற் கலவை n காண்டு உருவாக்கப்படும் வீடுகளாகும். அதனையும் எமது மக்கள் அங்கீகரிப்பார்கள். இந்நி லையில் தேசிய நல்லிணக்க அமைச்சினால் கட்டப்படவுள்ள வீடுகளுக்கான கேள்வி கோரலு க்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கையொப்பமிடவேண்டிய தேவை உள்ளது. ஆன 

hல் அவர் அந்த கையொப்பத்தை கொடுக்காமல் தொடர்ச்சியாக இழுத்தடித்து கொண்டிருக்கி ன்றார். அதே சமயம் தேசிய நல்லிணக்க அமைச்சினால் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீ டுகளை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக செய்ய முடியாது. என மீள்குடியேற்ற அமைச்சி ன் செயலாளர் கூறிவருகின்றார். இந்த இரு அமைச்சு செயலாளர்களும் தமிழர்கள். வடகிழக்

கு மாகாணங்களில் சுமார் 1லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளது. ஆகவே 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளை எமது மக்களுக்கு பெற்று கொடுப்பதன் ஊடாக மிக பெரும் பான்மையான மக்கள் வீடுகளை பெறுவார்கள். அதற்கு அமைச்சு செயலாளர்களிடம் மன மா ற்றம் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.