SuperTopAds

கொரோனா பரவும் அச்சம்!! -1 கோடியே 70 இலட்சம் சீரிகளை அழிக்க உத்தரவு-

ஆசிரியர் - Editor III

உலகின் முன்னணியில் உள்ள 6 நாடுகளில் மிங்க் எனப்படும் கீரி வகை விலங்குகளிடையே வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

டென்மார்க், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் எழுந்துள்ள இந்த புதிய சிக்கல் நிலையை அடுத்து ஒரு கோடியே 70 இலட்சம் மிங்க் விலங்குகளைக் கொல்ல டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசரப்பட்டு, சட்டபூர்வமான அடிப்படையில் செயற்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் டெர்மார்க் அரசின் உத்தரவு தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

எனினும் மிங்க் விலங்குகளிடையே பரவும் கொரோனா வைரஸின் மரபணு மாற்றப்பட்ட வடிவம் எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும் என்று டெனிஷ் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். 

இந்நிலையில் கொல்லப்படும் குறித்த விலங்குகளை டெனிஷ் கிராமப்புறங்களில் பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்டு மிங்க் விலங்குகள் புதைக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் கண்காணிப்புடன் பண்ணைகளில் உள்ள மிங்க விலங்குகளை அழிக்குமாறு பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 கோடியே 70 இலட்சம் வரையில் இந்த விலங்குகளை அழிக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பணி முழுமையாக முடிய சில வாரங்கள் ஆகும் எனக் கருதப்படுகிறது.