கொரோனா தொற்றலாம் என்ற பய பீதி..! தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட இருவர், இலங்கையில் துயர சம்பவம்..
கொரோனா தொற்று பீதியினால் நாட்டில் இரு இடங்களில் இருவர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக சுகாதார பிரிவு தொிவிக்கின்றது.
களுத்துறை - அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.
நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கம்பஹா - ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு.
இவ்வாறான வீணான பீதிகள் தேவையற்றது. மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை உரியமுறையில் பேசி அரசாங்க அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் எங்களையும் எங்கள் சமூகத்தையும் பாதுகாக்கலாம்.
அறிவற்ற இவ்வாறான முடிவுகள் தேவையற்றது.