பொலிஸ் பேச்சாளரின் அறிவிப்பு..! வீடுகளைவிட்டு வெளியேறவோ, வேலைகளுக்கு செல்லவோ அனுமதியில்லை, மக்கள் அச்சப்படதேவையில்லை..

ஆசிரியர் - Editor I

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படாது. என பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மருத்துவ உதவி தேவைப்படும் கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள் மட்டும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். 

என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவசியம் ஏற்படின் பொலிஸாரின் அனுமதி பெறப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் வரை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு