கடற்றொழில் அமைச்சின் சுற்றுலா விடுதிக்குள் பதுங்கியிருந்த 3 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்..! அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்புள்ளதாம்..
மின்னோியாவில் சுற்றுலா பங்களா ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் அரசியல்வாதி ஒருவர் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை தொியவந்துள்ளது.
இதுகுறித்து பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில் சந்தேக நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டபோது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அவர்கள் மாத்தறை பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் இவர்கள் Ministry of Fisheries சேர்ந்த ஒரு சுற்று பங்களாவில் பதுங்கி இருந்தனர் என்றார்.இவர்களுடன் தங்கியிருந்த மேலும் 4 பேர் கொரோனா பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் தொற்றுறுதியான மூன்று பேர் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு அரசியல்வாதி சுகாதார சேவைகளைத் தவிர்ப்பதிலும், இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை இரகசியமாக வைத்திருப்பதிலும்
ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக
அவர் மேலும் தெரிவித்தார்.