குற்றவாளிகளை அரசு அங்கீகரிக்கிறது! - சம்பந்தன் சாடல்

ஆசிரியர் - Admin
குற்றவாளிகளை அரசு அங்கீகரிக்கிறது! - சம்பந்தன் சாடல்

காணா­ம­லாக்­கப்­பட்டோர் விவ­கா­ரத்தில் கடந்­த­கால கார­ணி­களை நிரா­க­ரித்து எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணிக்க முடி­யாது. காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த விவ­கா­ரத்தில் கடந்தகால சம்­ப­வங்­களை கருத்­தில்­கொள்ள முடி­யாது என்றால் குற்­ற­வா­ளி­களை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கின்­றது என்றே அர்த்­த­ப்ப­டு­கின்­றது. எனவே வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை மீண்டும் அர­சாங்கம் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் மீதான விவா­தத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார்.

வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டுதல் குறித்து இன்று நாம் ஆராயும் நிலையில் இது இலங்­கையின் மிக நீண்­ட­கால நெருக்­க­டி­யாக உள்­ளது. கடந்த காலங்­களில் குறிப்­பாக ஜே.வி.பி.யின் கிளர்ச்­சிக்­கா­லத்தில் (1979-–1981) பொது­மக்கள் காணா­மலாக்­கப்­பட்­டனர். இக் காலத்தில் அப்­போ­தைய எதிர்க்­கட்சி உறுப்­பினர் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவ­காரம் குறித்து தொடர்ச்­சி­யாக கேள்வி எழுப்­பி­ய­துடன் ஜெனிவா வரை சென்று இந் நிலை­மை­களை எடுத்­து­ரைத்­துள்ளார்.

அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டையும் கால­கட்டம் வரை­யி­லும்­கூட நாடு முழு­வதும் பேசப்­பட்ட ஒரு விடயம் இந்த காண­ாமல்­போனோர் விவ­கா­ர­மாகும். குறிப்­பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் காணா­ம­லாக்­கப்­பட்­டமை பர­வ­லாக பேசப்­பட்ட ஒரு விட­ய­மாகும். இவற்றின் அடிப்­ப­டையில் தான் இன்­று­வரை தமிழ் மக்கள் தமது உற­வு­களைத் தேடி போராடி வரு­கின்­றனர். கடந்த காலத்­தி­லி­ருந்து தமிழ் மக்கள் தமது உற­வு­க­ளுக்­காக தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதில் முக்­கி­ய­மா­னது இறுதி யுத்த கால­கட்­டத்தில் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பொது­மக்­களே காணாமல் போயுள்­ளனர். இது நியா­ய­மற்ற விட­ய­மாகும். இன்று அர­சாங்கம் வலுக்­கட்­டா­ய­மாக காணா­மலாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து தடுக்கும் சட்­டத்தை கொண்­டு­வரும் நிலைப்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. இச் சட்டம் கொண்­டு­வ­ரப்­படும் நிலையில் கடந்­த­கால நிலை­மைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இந் நாட்டின் சுயா­தீ­னத்தில் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டுகள் உள்ளதென்பதும் அவர்­களின் அழுத்தம் மற்றும் நெருக்­க­டி­களை ஏற்­று­க்கொள்ளக் கூடாதென்பதும் சர்­வ­தேச தலை­யீட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாதென்பதும் ஒரு சில­ரது நிலைப்­பா­டாக உள்­ளது. இது நாட்டின் சுயா­தீ­னத்தை அழிக்கும் என கூறு­கின்­றனர். எமக்கும் நாட்டின் சுயா­தீனம் குறித்து அக்­கறையுள்­ளது. ஆனால் நாட்டின் சுயா­தீனம் என கூறிக்கொண்டு சர்­வ­தேச சட்­டங்­களை மீறியும் சர்­வ­தேச தலை­யீடு இருக்கக்கூடாது என்­ப­தற்­கான தான்­தோன்­றித்­த­ன­மாக சட்­டங்­களை, நியா­யங்­களை உரு­வாக்­கிக்­கொண்டு ஆட்­சி­செய்­வதும் ஒரு­போதும் சுயா­தீ­ன­மாக அமை­யாது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். நாம் சர்­வ­தேச சட்டதிட்­டங்­க­ளையும் மதிக்க வேண்டும். அதேபோல் இறுதி யுத்தமொன்று இடம்­பெற்­றபோது ஆயுதம் ஏந்­திய விடு­தலைப்புலிகள் இலங்கை இரா­ணு­வத்தால் அழிக்­கப்­பட்டு யுத்தம் வெற்­றி­கொள்­ளப்­பட்­டது. எனினும் இதில் பொது­மக்கள் தண்­டிக்­கப்­பட்­டமை, காணா­ம­லாக்­கப்­பட்­டமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத விட­ய­மாகும்.

இலங்­கையில் புலி­களை அழித்து யுத்­தத்தை வெற்­றி­கொண்ட நோக்­கத்­திற்­காக இலங்கை இரா­ணு­வத்­தையும் முன்­னைய அர­சாங்­கத்­தையும் சர்­வ­தேசம் தண்­டிக்­க­வுள்­ளது எனவும் ஒரு­சிலர் கூறு­கின்­றனர். இதை ஏற்­று­க்கொள்ள முடி­யாது. இலங்­கையில் உள்­நாட்டு யுத்தம் ஒன்று இடம்­பெற்ற நிலையில் விடு­தலைப் புலி­களை எதிர்த்து சர்­வ­தேச நாடுகள் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தன. சர்­வ­தேச தலை­யீ­டுகள் இந்த யுத்­தத்தில் காணப்­பட்­டன. இலங்கை அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தே­சத்தின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு அமைந்­தது. பல நாடுகள் விடு­தலைப்புலிகள் இயக்­கத்தை தடைசெய்­தன. பல நாடுகள் நிரா­க­ரித்­தன. பல நாடு­களிலிருந்து புல­னாய்வு தக­வல்கள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. முழு­மை­யாக பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இந்­தியா போன்ற நாடுகள் இறுதி யுத்­தத்தில் அதிக பங்­க­ளிப்பு செய்து இலங்கை அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஐக்­கிய நாடுகள் சபையும் கூட இலங்­கையை ஆத­ரித்து செயற்­பட்­டுள்­ளது. ஆகவே சர்­வ­தேச நாடுகள் விடு­தலைப்புலி­களை ஆத­ரித்­தன என்­பது உண்­மைக்கு அப்­பாற்­பட்ட கார­ணி­யாகும்.

இவ் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து 3 ஆண்­டு­களைக் கடந்­துள்ள நிலையில் நாட்டில் தீர்­வு­களை பெற்­றுத்­த­ருவோம், உண்­மை­களை கண்­ட­றிவோம் என கொடுத்த வாக்­கு­று­திகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சாங்­கத்தின் பயணம் உறு­தி­யாக இல்­லை­யென்­பது தெரி­கின்­றது. இவ் அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த சட்டம் எதிர்­கா­லத்தில் நடக்கும் செயற்­பா­டுகள் குறித்து மட்­டுமே கவனம் செலுத்துமெனவும் கடந்­த­கால சம்­ப­வங்கள் இதில் உள்­ள­டக்­கப்­ப­டாது எனவும் வெளி­வி­வ­கார அமைச்சர் சபையில் தெரி­வித்தார்.

ஏன் இவ்­வா­றான ஒரு தீர்­மா­னத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றது என தெரி­ய­வில்லை. ஏன் கடந்­த­கால சம்­ப­வங்­களை ஆராய முடி­யாது? இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்து இலங்கை அர­சாங்கம் யுத்தம் செய்­தது. இதில் இலங்கை அர­சாங்கம் பாது­காப்பு தரப்பை பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் கட்­

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு