சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறாமல் இடம்பெற்ற திருமணம், மண மகனுக்கும், மண பெண்ணுக்கும் கொரோனா..! 120 பேர் தனிமைப்படுத்தலில்..
சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறாமல் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகனுக்கும், மண பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணத்தில் கலந்துகொண்ட மற்றும் அவர்களுடன் பழகிய 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி இல்லாமல்
திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மண மகனுக்கும், மண பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் கேகாலை மாவட்டத்தில் இதுவரை 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார விக்கிரமசிங்க கூறியுள்ளார்.