கடந்த 21 நாட்களில் 11 பேர் கொரோனா தொற்றினால் மரணம்..! நாட்டில் 24வது மரணம் பதிவானது, 78 வயதான முதியவர்..
கொரோனா தொற்றினால் 24வது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தொிவிக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு 13ஐ சேர்ந்தவர்.
மினுவாங்கொட கொரோனா கொத்தணி ஆரம்பித்ததை தொடர்ந்த கடந்த 21 நாட்களில் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.