ரத்தக் குழாய்களை பாதிக்கும் டிரான்ஸ் பேட் கொழுப்பு!

ஆசிரியர் - Admin
ரத்தக் குழாய்களை பாதிக்கும் டிரான்ஸ் பேட் கொழுப்பு!

எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் பேட் என்ற கொழுப்பை உருவாக்கி விடுகிறது. இது நேரடியாக நம் இருதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் கொழுப்பை தாவரங்களால் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் மார்க்கெட்டில் இருக்கும் எந்த விதை எண்ணெய்களிலும் கொலஸ்ட்ரால் இருக்காது. ஆனால் ஒமேகா-6 எனும் ஒரு வகைக் கொழுப்பு விதை எண்ணெய்களில் மிகுந்திருக்கும்.

இந்த ஒமேகா-6 நம் ரத்தக்குழாய்களின் செல்களை டேமேஜ் செய்யும். அந்தப் பாதிப்பை சரி செய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். மேலும் விதை எண்ணெயை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.

எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் பேட் என்ற கொழுப்பை உருவாக்கி விடுகிறது. இயற்கையில் டிரான்ஸ் பேட் எனும் கொழுப்பு கிடையாது. பொரித்த உணவுகளில் இந்த கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இருதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

இன்று முதல் நாம் டிரான்ஸ் பேட் உள்ள உணவை சாப்பிடாமல் நிறுத்தினால்கூட, நம் உடல் முழுவதும் டிரான்ஸ் பேட்கள் இல்லாமல் போக மூன்று வருடங்கள் ஆகும். எந்த உணவுப் பொருளை வாங்கினாலும், அதில் டிரான்ஸ் பேட் அளவைப் பாருங்கள். அது கொஞ்சமாக இருந்தாலும்கூட அதை வாங்கவே கூடாது.

இன்னொரு திடுக்கிடும் தகவல் வாட்ஸ் அப்பில் சுற்றுகிறது. உலகில் சூரிய காந்தி எண்ணெய் உபயோகப்படுத்தப்படும் அளவுக்கு, சூரியகாந்தி விளைச்சல் கிடையாது. அதனால், சூரிய காந்தி மற்றும் பிற விதை எண்ணெய்களுடன் பெட்ரோலிய எண்ணெய் கலக்கப்படுவதாக வதந்தி. இது உண்மையாக இருக்கும் அபாயமும் உள்ளது.

1900-களில் பன்றிக்கொழுப்பை வைத்து சோப் தயாரிக்க ஆரம்பித்தனர். செலவு அதிகரிக்கவே, நஷ்டம் அடைந்த வியாபாரிகள் பருத்தி விதை எண்ணெய் பயன்படுத்தினால் என்ன என யோசித்தனர். அதனால் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதியை உருவாக்கினர். இதில் 50 சதவிகிதம் ட்ரான்ஸ் பேட் உள்ளது. இதை மார்க்கெட் செய்வதற்காகவே உலகின் முதல் விளம்பர ஏஜென்சி தோன்றியது.

4 வருடங்களில் விற்பனையில் 30 மடங்கு வளர்ச்சி அடைந்தனர். விளம்பரங்களைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால், விற்பனை பெருகியது. 1990-களில் தான் இந்த எண்ணெய் நல்லதல்ல என ஆராய்ச்சி உலகம் ஒப்புக்கொண்டது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு