கர்ப்பவதியான பெண் தாதிக்கு கொரோனா தொற்று உறுதி..! நாட்டில் 20 தாதியர்கள், 60 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி தாதி ஒருவர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையிலேயே குறித்த தாதி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்.
இதேவேளை அரச தாதியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் 20 தாதியர்கள் மற்றும் 60 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும்,
நாட்டில் 300 சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் கூட்டிக்காட்டியிருக்கின்றது.