SuperTopAds

பொதுமக்களுக்கு சுகாதார பணிமனை விடுத்துள்ள கோரிக்கை..! சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதியுங்கள்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு சுகாதார பணிமனை விடுத்துள்ள கோரிக்கை..! சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதியுங்கள்..

சுவாக கோளாறு மற்றும் சுவாச நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு 

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் 

நோய் அறிகுறிகள் இருக்குமாயின், 0117 966 366 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.