இத்தாலியின் நிலையை நாடு தற்போது எட்டுகிறது, நாட்டிலுள்ள முதியவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.! இறப்புக்கள் அதிகரிக்ககூடும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தீவிரமானது. என சுட்டிக்காட்டியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாகவும் சங்கத்தின் பிரதிநிதி வைத்திய கலாநிதி ஹரிதா அலுத்ஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாடு பெரும் ஆபத்தில் உள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும்.
நாட்டில் முதியோர் தலைமுறை அதிக ஆபத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கை தற்போது இத்தாலிய நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என்றும், தொற்று நோய் இல்லாதவர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.