வீட்டில் உயிரிழந்த நபர்..! பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என்கிறார் நகர முதல்வர்..
ஹம்பகா - ஹேனகம பகுதியில் வீட்டிலேயே உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹம்பகா நகர முதல்வர் ஏரங்க சேனநாயக்க தனது சமூக வலைத்தளம் ஊடாக தொிவித்திருக்கின்றார்.
கம்பஹா – ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் கம்பஹா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,
உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த நபரின் இறுதிக் கிரியைகளை இன்று இரவிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதனை சுகாதார தரப்பினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.