கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் யாழ்ப்பாணம் வந்த 43 போில் 6 பேர் குறித்த தகவல் இல்லை, தொலைபேசியும் ஓவ்..! பொலிஸார் விசாரணையில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் பயணித்த NCG AC BUS (Bus No : WP NC 8760) பேருந்தில் பயணித்தவர்கள் தம்மை அடையாளப்படுத்துமாறும், 6 பேர் இன்னும் தம்மை அடையாளப்படுத்தவில்லை எனவும், 

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் கொழும்பிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் NCG AC BUS (Bus No : WP NC 8760) பேருந்தில் 43 பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில் 37 பேர் இன்று மாலைவரை அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய இருப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மிகுதி 6 பேர் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. என்பதுடன் குறித்த 6 பேரும் தொலைபேசியையும் அணைத்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த 6 பேருடைய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சமூகத்தினதும், அவர்களினதும் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தங்களை அடையாளப்படுத்தவேண்டும். என பணிப்பாளர் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு