SuperTopAds

இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும்..! ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் அமொிக்க இராஜாங்க செயலாளர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் சீனாவின் தலையீடு இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும். என அமொிக்க இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார். 

சீனாவே இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது.

ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுகின்றது. என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் 

கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, 

இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும். என்றார்.

இதேவேளை சீனா தூதரகம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வருகை இலங்கை- சீனா ஒற்றுமையை குலைக்கும் என எதிர்ப்பு தெரிவித்தது.