நாட்டை முடக்குவதா..? அப்படியான ஒரு தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை. அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கர்ச்ஜனை..!
நாட்டை முடக்கும் தீர்மானம் எதனையும் எடுக்கப்போவதில்லை. என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்றுமுன்தினம் நடந்தது. இதன்போது கொரோனா தொற்றின் அதிவேக அச்சுறுத்தல் குறித்து நீண்டநேரம் பேசப்பட்டிருக்கிறது.
நாட்டை முழுமையாக முடக்குவது பற்றி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை வினவிய சந்தர்ப்பத்தில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் அடையாளங் கண்டு முடக்குவதே தற்போதைய தீர்மானம் என்பதையும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சரான பஸில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றிருக்கிறது.
கொழும்பில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவருகின்றமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.