கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில்லை..! புதிய நடைமுறை இன்று முதல் அமுல்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் இன்று தொடக்கம் அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கோரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுடன் முதல் அடுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் இதுவரை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எனினும் நாட்டில் இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.