மீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..

ஆசிரியர் - Editor I

ஹட்டன் மீன் சந்தையில் வியாபாரம் செய்துவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன் எடுத்து விற்பனை செய்துவந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்தை தனிமைப்படுத்துவதுடன், சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Radio