SuperTopAds

கிளிநொச்சியில் ஒருவர் அடித்து கொலை

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் ஒருவர் அடித்து கொலை

 


கிளிநொச்சி- செல்வாநகரில் உள்ள தனது காணியை பார்க்கவந்த அமெரிக்க பிரஜை ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட் டு படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ப லனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும்இ கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி வந்து போவதாகவும்இ அவ்வாறு சில தினங்களிற்கு முன் வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளது.

குறித்த பகுதியில் பரவலாக மிளகாய் தூள் விசுறப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் இடம்பெற்ற பகுதியை அண்மித்த பகுதியில் புதிய கத்தி ஒன்றின் உறையும், தடி ஒன்றும் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. சம்பவம் இடம்பெற்ற பகுதியை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.