நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாக்குவது குறித்து இன்றிரவு தீர்மானமா..? இராணுவ தளபதி கூறியது நடக்குமா?
நாடு முழுவதிலும் வார இறுதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை இதுவரையில் ஏற்படவில்லை. ஆனால், இன்று இரவு பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் அது பற்றி ஆராயப்படும், இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற் நாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரையில் வெளியாகியுள்ள பி.சி.ஆர். பரிசோ தனை முடிவுகளின் அடிப்படையில், அந்த மீன் சந்தையுடன் தொடர்பு டைய 250 பேருக்கும் மேற்பட் டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
அவர்களில் 188 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 79 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவார். அத்துடன் களனியில் 53 பேரும், வத்தளையில் 9 பேரும், கடு வலையில் 5 பேரும், கிரிபத்கொட வில் 3 பேரும், வெல்லம்பிட்டியில் 9 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்களில் செய்யப்பட்ட பி.சி.ஆர். பரிசோத னைகளில் 25 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இரண்டு மீன்பிடித் துறைமுகங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள் ளனர். இத்திலையில், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களிடம்
நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் பெருமளவானமுடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ளன. இந்த முடிவுகள் வெளியான பின்னர் ஊரடங்கு தொடர்பாக அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். நாடு முழுவதிலும் வார இறுதியில் ஊரடங்கை நடைமு றைப்படுத்துவதற்கான தேவை இதுவரையில் ஏற்படவில்லை. ஆனால், நேற்று மாலை பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் அது பற்றி ஆராயப்படும்,
என்றார். ஏற்கனவே கம்பஹா மாவட்டத்துக்கும் கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.