ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கொழும்பு - பொரளையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புறக்கோட்டை வர்த்தகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த குடும்பத்தவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை வர்த்தகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தனர் என தெரியவந்ததும் அவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.