20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! துறைமுகத்தை பூட்டியது சுகாதார பிரிவு..
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பேருவளை மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.
பேருவளை மீன்பிடித் துறைமுகம் இன்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதன் பிறகு அங்கு 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்
அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்புகளை பேணிய நபர்களை தனிமைப்படுத்தவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.