யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றி வீடு சென்ற கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் உள்ள ராஜபிஹில்லா பகுதியில் வசிக்கும் 21 வயதான பெண் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் காங்கேசன்துறை பகுதியில் உள்ள ஒரு கடற்படை முகம் ஒன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுவதுடன் 

இவர் விடுமுறையில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தாய், தந்தை, தம்பி மற்றும் சகோதரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Radio