இருதய சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று..! 3 விடுதிகள் முற்றாக மூடப்பட்டது..
இருதய சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் 34ம், 35ம், 36ம் இலக்க விடுதிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிவித்திருக்கின்றது.
ஜா-எல வைச் சேர்ந்த ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நபர் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்..இந்த வார்ட்டுகளில் உள்ள அனைத்து நோயார்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.