SuperTopAds

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை முடக்குங்கள், ஊரடங்கு தீர்வாகாது..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

நாட்டில் கொரோனா 2ம் அலையின் மூலம் அறியப்படாத நிலையில், அபாய வலயங்களில் சமூக பரவல் உருவாகியிருக்கலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. 

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மினுவாங்கொடையுடன் தொடர்புடையன என அதிகாரிகள் கூறினாலும் சமூக பரவல் தொடங்கியிருக்கலாம் என்பதற்கான அறிகுறி இது என்றும் 

அச்சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். நாட்டில் அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறும் 

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு இடையில் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளமையானது ஒரு தீர்வு அல்ல என்றும் ஏனெனில் மக்கள் இன்னும் அனுமதிப் பத்திரத்தை காட்டி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதற்கிடையில், கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கையின் விரைவான அதிகரிப்பை கட்டுப்படுத்த நாட்டில் தற்போது 

உள்ள சுகாதார முறை போதுமானதாக உள்ளதா என்ற கவலையையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுப்பியுள்ளது.